சமூக வானொலி

LKR 500.00

சமூக வானொலி by Rasmin, M.C-ரஸ்மின்இ எம்.சி  Published by சேமமடு பதிப்பகம் , 1st Edition
சமூக அபிவிருத்திக்கான ஊடகத்தை வலுப்படுத்தல்
மக்கள் பங்களிப்பை ஊக்குவிப்பதுடன்இ அவர்களின் விருப்புக்களை பாதுகாத்து, மக்கள் தமக்குத் தேவை என்று கருதுகின்றவற்றை விடயப்பரப்பாகக் கொண்டிருக்கும்இ மக்களின் தொடர்பினை அதிகரிக்கச் செய்யும்; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நிகழ்ச்சிகளைப் படைக்கும்; சகோதர சமூகத்த வர்களின் வாழ்வியல் மீதான பரீட்சயத்தை அதிகரிக்கச் செய்யும்; சிறந்த மானிடப் பண்புகளை வளர்த்துஇ மக்களின் அன்றாட வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை நிகழ்ச்சிகளில் உள்ளடக்கிஇ அத்தகைய பிரச்சினைகளுக்கு உரியவர்களிடமிருந்து தீர்வுகளைத் தருவிக்கும்; பால்இ இனஇ மத பேதம்இ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி – தொடர்பாடல் நிகழ்ச்சிகளின் போது சகலருக்கும் சமவள வான வாய்ப்புகளை வழங்கும்; ஏகாதிபத்திய அல்லது சட்டவிரோத சக்திகளைவிட்டும் விலகிவாழும் பக்குவத்தையும் ஆற்றலையும் வளர்த்து வலுவான ஒரு சமுதாயத்தைத் தரிசிப்பதை இலக்காகக் கொள்ளும் ஒரு சமூக ஊடக நிறுவனமே சமூக வானொலியாகும்.
இலங்கையைப் பொறுத்தவரைஇ சமூக வானொலிக்கான தேவை உணரப்பட்டு சுமார் மூன்று தசாப்தங்களாகிவிட்டன. மகாவெலி சமூக வானொலித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்குள் இலங்கையின் சமூக வானொலிகள் குறிப் பிடத்தக்க அடைவுகளைச் சந்தித்திருக்கின்றன.
கிராமிய மக்களின் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும் வானொலி தனது தாக்கத்தைச் செலுத்தலாம் என்பதற்கு இலங்கை யின் ஆரம்பகாலச் சமூக வானொலிகளின் செயற்பாடுகள் சான்றாக இருந்துள்ளன. கள ஆய்வுஇ நேரடியாகச் சென்று நேயர்களின் விருப்பு வெறுப்பகளை அறிதல்இ மக்களின் பங்கேற்புக்கான வாயில்களை திறந்துவிடுதல்இ வலுவூட்டலுக்கான நிகழ்ச்சிகளைப் படைத்தல்இ மக்கள் பிரச்சினைகளை கள ஆய்வுக்குட்படுத்துதல்இ உள்ளூர் கலைஇ கலாசாரம் மற்றும் மொழிஇ நாட்டார் வாழ்வியல் என மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடி பிரதிபலித்தல் என்று அன்றைய சமூக வானொலிகள் போட் அடித்தளம் மிகவும் உறுதியாகவே அமைந்திருந்தது.
1990களின் பின்னர்இ வானொலி என்ற ஊடகத்திற்கும் மக்களுக்குமான தொடர்பில் பாரிய விரிசல் ஏற்படத்தொடங்கியது. மக்களின் விருப்பு வெறுப்பு என்கின்ற அம்சத்தைவிட விளம்பர தாரர்களின் திருப்தி முக்கியமான ஒரு நிபந்தனையாக மாறத் தொடங்கியது. வானொலி ஊடகம்இ அதிகாரத்தின் பாதுகாவலனாக செயற்பட வேண்டிய நிர்க்கதிக்கு உள்ளானது. அரச வானொலி ஊடகங்களுக்கு நிகராக தனியார் வானொலி நிலையங்கள் தமது இருப்பினை மிகவும் பலமான முறையில் அமைக்கத் தொடங்கின. கருத்தியல் போராட்டத்தை நடாத்தும் முதலாளி வர்க்கத்திற்கு மலிவு விலையில் கிடைக்கும் ஆயுதமாக வானொலி தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்ளத் தொடங்கியது. சமுதாயக் கடப்பாடு என்பதைவிட பொழுதுபோக்கு என்பது வானொலிக்கான முதன்மையான பணியாக மாறத்தொடங்கியது. இத்தகைய ஒரு பின்புலத்தில் பிரதான நிலை ஊடகங்கள் தமது செல்நெறியை மாற்றிக்கொண்டன. இந்நிலையில்இ இலங்கையில் சமூக வானொலிகளின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாகஇ சமூக வானொலிகள் பிரதான நிலை ஊடகங்களின் தாக்கத்திற்கும் ஆதிக்கத்திற்கும் நிகராக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் பலவாறான சிரமங்களைச் சந்தித்தன. மறுபக்கத்தில்இ அரசாங்கத்தினதும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினதும் அசிரத்தையும் இதில் பாரிய தாக்கத்தைச் செலுத் தின. இத்தகைய விடயங்களை முடிந்தளவில் ஆய்வுக்குட்படுத்துவது இந்நூலின் ஒரு பகுதியின் நோக்கமாகும்.
இலங்கையின் சமூக வானொலித்துறையில் ஆரம்பத்தில் தம்மை அர்ப்பணித்த பலர் தமது கருத்துக்களுக்கும் ஆற்றல்களுக்கும் சமூக வானொலி குறித்த ஆர்வத்திற்குமான சரியான களத்தை இழக்க நேரிட்டதோடுஇ அத்தகையவர்களின் தேடல்களும் அனுபவங்களும் அடுத்த பரம்பரையை நோக்கிக் கடத்தப்படுவதற்கான சூழ்நிலையும் உருவாக்கப்படவில்லை. மிகவும் உத்வேகத்துடன் இயங்கிக் கொண்டிருந்தவர்களுள் பலர் வெளிநாடுகளில் சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்று நாட்டைவிட்டே சென்றனர். சிலர் உள்ளூர் ஊடகங்களில் சில முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர். சமூகவானொலி பற்றிய நாட்டத்தைப் புதிய பரம்பரையினரிடம் ஏற்படுத்த வேண்டிய காலம் தாண்டிக் கொண்டிருக்கினற்து.

SKU: 978-955-685-001-7
Categories:, ,
Tag:
Weight 0.150 kg
Dimensions 1.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

208

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.