China and Indian Ocean -சீனாவும் இந்துசமுத்திரமும்

LKR 500.00

சீனாவும் இந்துசமுத்திரமும் by கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் Published by  சேமமடு பதிப்பகம், 1st Edition

‘சீனாவும் இந்துசமுத்திரமும்’ என்ற இந் நூல் கடந்த மூன்று வருடங்களாக கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட போது தேடப்பட்ட தகவல்களின் மேலதிக வாசிப்பினால் உருவானதாகும். இன்றைய உலக ஒழுங்கு பற்றிய தேடலில் மிகப்பிந்திய முடிவுகளை வெளியிடும் அமெரிக்கப் பல்கலைக்ககைமான ஹவாட்ன் சர்வதேச அரசியல் கற்கையின் பேராசிரியரான ஜோஸப்நை இன் கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
அவர் தொடர்ச்சியாக உலக ஒழுங்குபற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவதனால் இன்றைய உலக ஒழுங்கின் போக்குகளை சரிவர முன்வைத்து வருபவராக உள்ளார். அவரது வாதமே அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலகம் முடிபுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பலதுருவ ஒழுங்குக்குள் உலகம் நகர்வதாகவும் அதில் சீனாவின் பங்கு அதிகமானதெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ – அரசியல் வலுவை சீனா சமப்படுத்தாது விடினும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் சக்தியாக எழுச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளரும் ஜனநாயகக்கட்சியின்  ஜனாதிபதி வேப்பாளராக விளங்கியவருமான கில்லாரி கிளின்டன் சீனா இராணுவ ரீதியில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் நாடாக வளர்ந்துள்ளதுடன் அமெரிக்காவை வேவுபார்க்கும் நாடாக உள்ளதென குறிப்பிடுகின்றார். உலகை அமெரிக்கா வேவுபார்க்க அமெரிக்காவை சீனா வேவுபார்க்கின்றது என்றால் அதன் வலியை வளர்த்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இருந்த போதும் சீனாவை வெற்றி கொள்ள அல்லது எழுச்சியை தடுக்க அமெரிக்க உலகளாவிய கூட்டுக்களைப் பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜப்பான், ஐரோப்பிய யூனியனின் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை அமெரிக்க தனது அணிக்குள் வைத்துக் கொண்டு சீனாவை எதிர்கொள்கிறது. இத்தகைய அணியின் பலத்துடன் உலக ஒழுங்கு ஒரு பல்துருவ அரசியலுக்குள் பிரவேசித்துள்ளது என்பதை ஜோசப்நை குறிப்பிடுகின்றார். அவரது வாதம் மிக நியாயமானதாகவே அமைந்துள்ளது. சீனா, ரஷ்யா, என்பன ஒரணியிலும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், பிரித்தானிய ஓரணியிலும் பயணித்த போதும் பொருளாதார, அரசியல் இராணுவ நிலையில் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது என்பதே பல்துருவ அணிக்கான பரிமாணமாக உள்ளது. இதுமட்டுமன்றி அரசியலிலும், இராணுவத்திலும் அமெரிக்க அணிவல்லமை பொருந்தியதாக அமைய சீனா பொருளாதார பலத்தையும் இராணுவ கடற்பலத்தையும் கொண்டிருக்கிறது. இதனை இன்னோர் அமெரிக்க ஆய்வாளரும் முன்னால் இந்தியாவுக்கான அமெரிக்கதூதுவருமான வில்லியம் ஆவேரி குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
உலகிலேயே சீனா 1.6 மில்லியல் இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு 2025 இல் அமெரிக்காவின் கடற்படையைவிட வலுவுடைய கடற்படையைக் கொண்ட நாடாகமாற உள்ளது. 2010 இல் சீனா 119 பில்லியன் அமெரிக்க டொலரை பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கியிருந்தது. அது 2020 இல் 225 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2030 இல் 425 பில்லியனாகவும் அமையவுள்ளது என்கின்றார் ஆவேரி. இதனால் சீனாவின் இராணுவ பலம் அதிகரிக்கப் போகிறது. அதிலும் கடற்படை மிக அதீதமானதாக அமையவுள்ளது. காரணம் சமுத்திரங்கள் மற்றும் கடல்கள் வர்கத்துடனும் போக்குவரத்துடனும் வளங்களை அதிகம் கொண்டுள்ள வகையிலும் மிக முக்கியம் பெறுகிறது. இதனால் சமுத்திரங்களை நோக்கி வல்லரசுகளின் நகர்வுகள் முதன்மையடைந்துள்ளன.
ஏறக்குறை உலக வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கு மேல் சமுத்திரங்களுடாகவே பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன. பனாமா, சுயஸ் கால்வாய்களின் முக்கியத்துவமும், மலாக்கா நீரிணையின் பங்கும் கப்பல் போக்குவரத்தின் பிரதான பகுதிகளாக உள்ளது. சீனாவின் எண்ணெய் இறக்குமதி மலாக்கா நீரிணையூடாக ஏறக்குறைய 40 சதவீதம் நிகழ்கிறது. சீனாவுக்குரிய மிகப் பிரதான பிரச்சினை சக்திவள நெருக்கடியாகும். இதனால் உலகிலுள்ள எண்ணெய்வளம் உள்ள அனைத்துப் பிராந்தியங்களுடனும் தரை, கடல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தி சீனா மக்களின் நுகர்வுக்கு அவசியமான எண்ணெய் வளத்தினை இறக்குமதி செய்கின்றது.
ஆனால் சீனாவின் சக்திவள நெருக்கடியை ஒருவகை உபாயமாக கருதும் அமெரிக்கா சமுத்திரங்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர சக்திவள நெருக்கடியை ஒரு தந்திரோபாயமாக கொண்டு சீனாக்கடற்படை பலமடைகிறது எனக் குறிப்பிடுகின்றது. ஏனெனில் இத்தகையை மரபார்ந்த பாணியிலேயே அமெரிக்கா தனது கடற்படையை உருவாக்கியதாகவும் அதனை உருவாக்கி திட்டமிட்ட அட்மிரல் தயா மாகன் குறிப்பிடுகின்றார். ஏறக்குறைய சீனா தயாமாகனின் அதே அணுகுமுறையை பின்பற்றி தனது கடற்படை கொள்கையை வளர்த்து வருகின்றது

உள்ளடக்கம் : இந்து சமுத்திரப் பிராந்தியம் ஓர் அறிமுகம் ,சீனாவும் இந்து சமுத்திரமும் புராதன
காலம் முதல் 15ம் நூற்றாண்டு வரை ,சீனாவின் முத்துமாலைத் தொடரும் ,இந்து சமுத்திரமும்  ,இந்துசமுத்திர விழிப்பு நாடுகளுடனான,சீனாவின் உறவு,கொழும்பு துறைமுகம் நகரத் திட்டம்

SKU: 978-955-685-045-1
Category:
Tags:, ,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Format

Pages

160

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.