Education Managment-கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் நவீன அணுகுமுறைகள்

LKR 750.00LKR 760.00

கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள் நவீன அணுகுமுறைகள் by மா.செல்வராஜா Published by  சேமமடு பதிப்பகம்.

முகாமைத்துவ விடய ஆய்வு தொடர்பாக 1991ஆம் ஆண்டு வெளியான எனது வெளியீடுகள் பற்றி ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் ஆகியோ நன்கறிவர். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிருவாகிகள் மட்டுமன்றி முகாமைத்துவத்தில் நாட்டமுள்ள அனைவரும் தமது தொழில் திறன்களை வளர்க்கும் பொருட்டும், சுயமான கற்றலை மேற்கொள்ளவும், கல்வி தொடர்பான பரீட்சைகளுக்குத் தம்மை ஆயத்தம் செய்யவும், இன்னும் கூடிய விளக்கங்களுடனும் வழிகாட்டல்களுடனும் இதனை மீண்டும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றுமுகமாக இந்நூல் வெளிவருகின்றது.
பாடசாலை முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. விடய ஆய்வுக்கு விடையளிக்கும் பல்வேறு அணுகுமுறைகள், விடய ஆய்வுகள், அவைகள் மீதான வினாக்கள், குறிப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கி வெளிவரும்  இந்நூல், அதிபர்கள் சேவைப்பரீட்சை (SLPS), கல்வி நிருவாக சேவைப் பரீட்சை (SLEAS), தடைதாண்டுப் பரீட்சைகள் (EB),பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, புதுமுகத் தேர்வுகள் போன்றவற்றுக்கும் பயன்படுவதுடன், கல்வித் துறையில் பணிபுரிவோர் தம் முகாமைத்துவத் திறன்களை வளர்ப்பதற்கும் பயன்படும்.
தமிழில் கல்வி முகாமைத்துவ இலக்கியங்கள் மிக அரிதாகவே யுள்ளன. தமிழ்மொழி மூலம் கல்விப் போதனை இடம்பெறும் இக்காலத்தில் முகாமைத்துவ இலக்கியங்களுக்குத் தேவை அதிகமாக வுள்ளது. இதனை உளத்திற் கொண்டே பல்வேறு செயற்பாடுகளின் மத்தியிலும் இந்த வெளியீட்டு முயற்சியில் பணியாற்ற வேண்டியதாயிற்று.

SKU: 978-955-685-038-3
Category:
Tags:,
Weight 0.275 kg
Dimensions 2 × 14 × 21 cm

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.