குமரிக்கண்டமா ? சுமேரியமா ?

LKR 740.00LKR 765.00

குமரிக்கண்டமா ? சுமேரியமா ?தமிழரின் தோற்றமும் பரவலும் by  பா. பிரபாகரன் Published by கிழக்கு பதிப்பகம், 1st Edition

தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில்இ குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது?
தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல்இ இலக்கியம்இ வரலாற்று ஆவணங்கள்இ அகழ்வாராய்ச்சிகள்இ கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன்இ தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார். அதன் அடிப்படையில் உருவாகும் அவருடைய கோட்பாடு சில புதிய சாத்தியங்களை நம் முன் வைக்கிறது.

சிந்துசமவெளி நாகரிகம்இ சுமேரிய நாகரிகம்இ தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்புஇ ஆரியரின் வருகைஇ சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
தமிழர்களின் தொன்மம்இ தோற்றம்இ பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல்இ சில முக்கிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது.

SKU: 978-81-8493-790-9
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

176

Publisher

கிழக்கு பதிப்பகம்-Kizhakku Pathippaham

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.