History of Jaffna-யாழ்ப்பாணச் சரித்திரம்

LKR 390.00LKR 400.00

யாழ்ப்பாணச் சரித்திரம் by ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை Published by சேமமடு பதிப்பகம் ,4th Edition

யாழ்பாணத்திலேயுள்ளவர்க்கு, யாழ்பாணத்தினது பூர்வோத்தர  சரித்திரத்தை அறிவது அவசியமும் ஆனந்தமுமாம் யாழ்பாணத்தை பூகோள படத்திலே நோக்கும்போது அது கடுகுபிரமாணமாய்த் தோன்றினும் அதன் சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாகின்றது. யாழ்பாணம் சிறியதாயினும் அதிலிருந்தரசியற்றியசிலவரசர்இ தமது பாராக்கிரமத்தினாலே இலங்கை முழுதையுங் கட்டியாண்டதோடுஇ பாண்டிநாடு சேரசோழ நாடுகளையும் ஒவ்வோரமையங்களில் வெற்றிக்கொண்டிருக்கின்றார்கள். என்றால் அதன் சரித்திர பெருமை கூறவும் வேண்டுமோ. 1505ல் இலங்கைக்கு  வந்த பறங்கிக்காரர்  இலங்கையில் அநேக நாடுகளை சிங்களவரசர்பாற் கவர்;ந்தப்பின்னரும் நூறுவருஷஞ் சென்றே யாழ்பாணத்தை பிடித்தார்கள். அவர்கள் மூன்றுமுறை போர்தொடுத்தும் நிருவகிக்க முடியாது தோற்றோடினார்;கள் என்பர்;. சமாதானமாகி யாழ்பாணத்தரசர் தமது நாட்டை பறங்கிக்காரர் காலத்திலுங் கைவிடாது நூறுவருஷம் ஆண்டார்களென்பது உண்மை. பறங்கிகாரரோடு பொருது நிருவகிக்கவாற்றாத சிங்களவரசர் சிலர் யாழ்பாணத்தரசரிடம் அடைக்கலம் புகுந்தார்கள் என்பது இலங்கை சரித்திரத்தாற் றுணியக்கிடத்தலின், பறங்கிக்காரர் காலத்தும்யாழ்பாணம் வலிய அரசுடையதாயிருததென்பது திண்ணம்.
இத்துணைச் சிறந்த யாழ்பாணவரசு இற்றைக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் ( 161 AD) அரசு செய்த ஏலேலன் காலத்திலே தொடங்கியது. இடையிடையே அரசின்றி சிலகாலமும் வழிவழியரசோடு நெடுங்காலமும்இ பின்னருமிடையிடையே சிங்களவரசு சிலகாலமும்இ பின்னரும்தமிழரசு வழிமுறையாகச் சிலகாலமுமாக 1700 வருஷம் சுவதேசவரசு  நடந்தது. அதன்மேற் பறங்கியரசு 40 வருஷமும்இ ஒல்லாந்தவரசு 150 வருஷமும் நடந்தொழியஇ 1796ல் ஆங்கிலவரசு வந்து நடக்கின்றது. இப்படியே யாழ்பாணம் ஏறக்குறைய 2000 வருஷ சரித்திரமுடையது.
யாழ்ப்பாணப் பூர்வசரித்திரத்திற்கு ஆதாரநூல்களாயிப்போதுள்ள வைபவமாலையும்,கைலாசமாலையுமே. அவையுஞ் சொரூபந்திரிந்துவிட்டனவாய்த் தோன்றுகின்றன. பறங்கிக்காரர் காலமுதலாகப் பிற்காலத்துச் சரித்திரம்பறங்கிகாரராலும் ஒல்லாந்தராலும், ஆங்கிலேய காலத்துச் சரித்திரம், ஆங்கில காலத்துச் சரித்திரம் ஆங்கிலேயராலுமெழுதப்பட்டிருக்கின்றன.பறங்கிகாரரும் ஒல்லாந்தரும்தமது கொடுங்கோன்மையைக் குறைத்தும் திரித்தும் எழுதியிருப்பதால் அது முழுவதும் உண்மையெனக் கொள்ளப்போகாது. வைபவ மாலைக்கு முன்னே வையை பாடலென ஒரு சரித்திரமிருந்தது அஃதகப்படவில்லை

SKU: 978-955-1857-22-6
Category:
Tags:, ,
Weight 0.250 kg
Dimensions 3 × 14 × 21 cm

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.