மலைகளைப் பேசவிடுங்கள்

LKR 450.00

மலைகளைப் பேசவிடுங்கள் by மல்லியைப்பு சந்தி திலகர், Published by Bakya Publishers , 2nd Edition 2020
இது ஒரு புதுக்குரல் என்பதால் மலையக அரசியலில் இந்த மக்களுக்கான – அவர்களின் சுபீட்சத்துக்கான
முதற் குரலாகவும் திகழ்கின்றது. மலையகம் என்கின்ற உணர்வுடனும், மலையக மக்கள் என்கின்ற உறவுடனும் ஏற்படுகின்ற மனக்கிளர்வுகள் அரசியல் மயப்படும்போது மேலெழுகின்ற சமூகத்தின் குரலாகவே அது ஒலிக்கிறது- தெளிவத்தை ஜோசப்

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்,சமூக அரசியல் ஆய்வாளர், மும்மொழித் திறனாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக ஆளுமை கொண்ட மல்லியப்புசந்தி திலகரின் ‘மலைகளை வரைதல்’ என்ற ஆங்கில நூல்கள் பற்றிய அறிமுக நூல் ஒரு புதுவகையான முயற்சியாகும்.
இந்த நூலின் இருபது அத்தியாயங்களும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக 2020 மே மாதம் முதல் செப்தெம்பர் இறுதிவரை கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலும் 1980-2019 ஆகிய காலப்பகுதியில் வெளிவந்த ஆங்கில நூல்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், இவை ஆய்வு, கலை இலக்கியம், கவிதை, வரலாறு, நினைவுப்பகிர்வு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இருபது அத்தியாங்களில் 19 நூல்கள்,ஒருநூல் பக்கங்களின் எண்ணிக்கைக் காரணமாக இரு அத்தியாங்களை உள்ளடக்கியதாய், பன்னிரண்டு ஆய்வுகளாகவும், நான்கு கலை, இலக்கியம், கவிதை சார்ந்ததாகவும்,, இரண்டு வரலாறுகளாகவும் ஒன்று நினைவுப்பகிர்வாகவும் மிளிர்கின்றன. இவை பெரும்பாலும் மலையகத்தை மையப்படுத்தியவை என்பது குறிப்பிடப்படப்வேண்டியதொன்று…

SKU: 978-955-1805-12-8
Categories:,
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

2nd

Format

Pages

109

Publisher

Bakya Publishers

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.