அகதியின் துயரம்

By (author)V.Suryanarayan

LKR 700.00LKR 720.00

அகதியின் துயரம்  : துலக்கம் இன்றி இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் துயர நிலைமீது அக்கரையின் வெளிச்சத்தைக் பாய்ச்சும் நூல் இது.
by சி. சூரியநாராயண், தமிழில்: பெர்னார்ட் சந்திரா, Published by காலச்சுவடு பதிப்பகம், 1st Edition 2021

இலங்கையின் இனச்சண்டை முடிவுக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களது நாட்டுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. இந்திய-இலங்கை உறவில் ஏற்பட்டுக்கொண்டிருந்த திருப்பங்களின் பின்னணியில் இலங்கைத் தமிழ் அகதியின் துயரங்களை இந்நூல் விவரிக்கின்றது.
உலக அகதிகள் நிலவரம், இந்தியா எதிர்கொண்ட அகதி அனுபவங்கள், இனப் பிரச்சினையால் உலகெங்கும் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள், இனங்களின் நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்கின்ற சிங்களவர்களின் போட்டி அரசியல் எனப் பல விடயங்கள் இந்நூலில் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட அனைத்து தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமைத் தேவைகளையும் இந்தியாவின் பாதுகாப்புக் கவனத்தையும் ஒருசேர உறுதிசெய்கின்ற ஒரு தேசிய அகதிகள் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் நூலாசிரியர் இந்நூலில் வலியுறுத்துகிறா.

அகதிப் பிரச்சினை எப்போதுமே சிக்கலாகத் தோன்றினாலும் தீர்வு காணப்பட முடியாதது அல்ல. நமது அனுபவத்தில் இதற்கு இரண்டு அடிப்படை முன் நிபந்தனைகள் தேவைப்படுகின்றன. அகதிப் பிரச்சினை உருவாவதற்கான காரணிகளைக் களைந்து அமைதியை உருவாக்கும் அரசியல் தீர்க்கமும் அமைதிக்கு அழுத்தம் தந்து உறுதி செய்யும் சர்வதேச மனஉறுதியும்தாம் தேவை. அமைதியை உறுதி செய்வதென்பது சண்டைகளிலிருந்து மீண்டுவந்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் நீதிஇ மனித உரிமைகள் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து வாழ்வாதார முன்னேற்றம் பெறுவதாகும்.

– சடாகோ ஒகாதா.

இலங்கை அரசு போருக்குப்பின் உள்நாட்டில் ஆயிரக்கணக்கில் சிதறிப்போனவர்களை மறுவாழ்வுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தியது. போர் நிலங்களில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணி நடந்தது. இராணுவத்தின் ஆதிக்கம் குறைக்கப்பட்டுத் தீவிர பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல பகுதிகளிலிருந்து இராணுவம் விலக்கப்பட்டு நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முதலில் கிழக்கு மாகாணம் பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது. பிறகுஇ வடக்கு மாகாணமும் மக்கள் வசிக்கத்தகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்இ போருக்குப் பிறகும் பல ஆண்டுகளாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசின் முன்னுரிமை என்றார்……

SKU: 978-93-90802-89-0
Categories:,
Tags:, , ,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

135

Publisher

காலச்சுவடு பதிப்பகம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.