யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும்

LKR 260.00

யாழ்ப்பாணத்தில் பெண்கல்வி : தோற்றமும் வளர்ச்சியும் by சசிகலா குகமூர்த்தி Published by சேமமடு பதிப்பகம்
‘யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பண்டைய காலம் தொடக்கம் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலம் வரையிலான காலப்பகுதிகள் வரலாற்று ரீதியாகக் கவனத்தில் எடுக்கப்பட்டது. பண்டைய காலம், போத்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம்,பிரித்தானியர் ஆட்சிக்காலம்இ சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலமென்ற ஒழுங்கிலே யாழ்ப்பாணத்துப் பெண்கள் கல்வி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. வரலாற்று ரீதியாக ஒவ்வொரு காலப்பகுதியிலும் நிலவிய சமூகக் கட்டமைப்புஇ சமூகத்தின் விசேட இயல்புகள் என்பன கவனத்தில் எடுக்கப்பட்ட தோடு ஒவ்வொரு காலப்பகுதியிலும் நிலவிய சமூகக் கட்டமைப் பிலே பெண்களின் சமூக நிலைஇ கல்விக்கான வாய்ப்புகள்இ கல்வி அறிவு என்பன எவ்வாறு நிலைகொண்டிருந்தன என்பதை விளக்கு வதாகவும் இந்த ஆய்வு அமைந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சபா. ஜெயராசா அவர்களது மேற்பார்வையில் இடம்பெற்ற இந்த ஆய்வுக் கற்கையானது பண்புசார் ஆய்வு அணுகுமுறையிலே வரலாற்று ஆய்வு வடிவத்தினைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை கல்வியில் முதுதத்துவமாணி பட்டத்திற்காக 2001ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

124

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.