தமிழரின் தோற்றமும் பரம்பலும்

LKR 240.00

தமிழரின் தோற்றமும் பரம்பலும் by V.R.Ramachanthira Theekshithar வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் Published by சேமமடு பதிப்பகம் , 1st Edition

தமிழரின் தாயகம் பற்றிய அரிய நூல் வரலாற்றறிஞர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த ஆங்கில நூல் (Origin and Spread of the Tamils ) இதனை அறிஞர் பி.இராமநாதன் ‘தமிழரின் தோற்றமும் பரவலும்” என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

1940 நவம்பரில் 29-30 தேதிகளில் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் ’தமிழரின் தோற்றமும் பரவலும்” பற்றி ஆற்றிய இரண்டு ஆங்கிலப் பொழிவுகளும் 1947ல் 53 பக்கங்களில் அச்சிடப்பட்டன. தமிழரின் தாயகம் தென்னாடே. இங்கிருந்தே பழந்தமிழ (திராவிட) நாகரிகம் சிந்துவெளிஇ சுமேரியம்இ எகிப்து ஆகிய பகுதிகளுக்குப் பரவியது என்பது அப்பொழிவுகளின் முடிவு. இப்பொழிவுகளுக்கான அடிக்குறிப்புக்கள் 47 பக்கங்களில் தரப்பட்டன. 1940களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த பல்துறை நூல்களிலிருந்து அப்பொழிவுகளின் முடிவுக்கான விரிவான ஆதாலரங்களை அக்குறிப்புக்கள் தந்தன. தீட்சிதரின் முடிவுகள் 1940-2006 கால அளவில் வேறு துறைகளில் ஏவப்பட்டுள்ள வளர்ச்சி நிலைகளின்படி எவ்வாறு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்பதை முன்னுரையில் காணலாம்.

‘உலக முதற்றாய் மொழி தமிழே’ என்று வலுவாக நிறுவியவர் மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்கள் மாந்த நாகரிக வரலாறு தெற்கிலிருந்து தொடங்கியிருக்கின்றது. என்று அவர் கூறுவார். அவர் போற்றிய வரலாற்று அறிஞர்களுள் ஒருவர் வீ. ஆர்.இராமசந்திர தீட்சிதர். தமிழரின் தோற்றம் பரவல்இ நாகரிகம் பற்றி போலியான ஆதாரங்களைக் காட்டியோ காழ்ப்புணர்வுடனனோ சில வரலாற்றிஞர்கள் வம்படி வழக்காடல்கள் செய்தனாஇ செய்து வருகின்றனர்.
ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் இத்தகைய பொய்யுரைகளைத் தோலுரித்துக் காட்டும் மெய்யான முயற்சிகளும் நடந்துவருகின்றன. அவ்வகையில் அறிஞர் வி. ஆர் இராமச்சந்திரனார் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி அது ஆங்கிலத்திலேயே Origin and Spread of the Tamils என்று நூலாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. அதை நம் காலத்தில் வாழும் வரலாற்று ஆய்வாளர பாவாணர் வழியிலே ஆய்வு நடைப்போடும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அருமையாக தமிழாக்கம் செய்துள்ளார் அதுவே உங்கள் கையில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் இச்சிறு நூல்.

SKU: 978-955-1857-42-4
Categories:,
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

116

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.