அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி…

By (author)S.Raguram

LKR 700.00

அபிவிருத்தித் தொடர்பாடல் மாற்று நோக்கி… by எஸ்.ரகுராம் Published by சேமமடு பதிப்பகம் , 1st Edition

பின் காலனியச் சூழல்இ உலகமயமாதல் ஆகியவற்றின் எழுபுலத்தில் மரபுவழி ஊடகங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் வளர்வுறும் நாடுகளிலே மேலெழத் தொடங்கியுள்ளன. கலாநிதி சி.ரகுராம் அவர்கள் மேற்கொண்ட நிகழ்த்தும் கலைகள் பற்றிய அகன்று ஆழ்ந்த இந்த ஆய்வு அந்த வகையிற் குறிப்பிடத்தக்கது.
தொடர்பாடல் இயல், சமூகவியல்இ உளவியல், அரசியற் பொருளியல்இ அரங்கியல் முதலாம் பன்முக அறநெறிகள் சார்ந்த நிலையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஓர் அணுகுமுறை ஆய்வுத் தளத்தை வலிமைப்படுத்துகின்றது.
தொடர்பாடல் நோக்கில் நாட்டார் ஊடகங்கள்;இ நாட்டார் நிகழ்த்து கலைகள் ஆகியவற்றின் மேலெழு கோலங்களையும் ஆழ்நிலைக் கோலங்களையும் கண்டறிவதற்குரியவாறு ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்பாடும் தொடர்பாடலும் ஒன்றிணைந்திருத்தலும்இ அவை சமூக அடிக்கட்டுமானத்தின் மேற்சுழற்சிகளாக இருத்தலும் குறிப்பிடத் தக்கவை. இந்திய மரபுவழித் தொடர்பாடலும்இ மரபுவழி ஊடகங்களும் நிகழ்த்துகலைகளும் சமூக அடித்தளம் மற்றும் மேல் அமைப்புஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் துல்லியமாகப் புலப்படுத்துகின்றன. விரிவான இந்த ஆய்வின் நீட்சி அதற்குரிய சான்றாகவும் அமைகின்றது.
வேட்டுவ வாழ்க்கைஇ ஆயர் வாழ்க்கைஇ நிலமானிய வாழ்க்கைஇ ஐந்திணை மரபுகள்இ தொன்மையான வர்த்தக முறைமைஇ அரசின் உருவாக்கம்இ கிராமிய வழிபாடுகள்இ சாதிய அடுக்கமைவு முதலியவற்றின் பண்புநிலை நீட்சியாக மரபுவழி ஊடகங்களும்இ நிகழ்த்துக்கலைகளும் அமைந்துள்ளன. அவை சமூக வரலாற்றைத் தாங்கிய வடிவங்கள். வெளித்தோன்றும் அழகியற் பரிமாணத்துடன் மட்டும் நிகழ்த்துகலைகள் கட்டுப்பட்டிருக்கவில்லை என்ற சமூகவியற் செய்தி ஆய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் விரிந்த படிநிலைகளைக் கொண்டதாக இந்த ஆய்வு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தொடர்பாடல் பற்றிய மரபு வழித்தடங் களில் இருந்துஇ நவீனபடி மலர்ச்சிவரை அனைத்தும் தழுவிய , வகையில் ஆய்வின் ஆக்கம் நீட்சி கொள்கின்றது. பலமான ஆய்வுத் தளங்களில் இருந்தே உறுதியான முடிவுகள் மேற்கிளம்ப முடியும்.
அபிவிருத்தியும் அபிவிருத்தித் தொடர்பாடலும் பற்றிய ஆய்வு விபரண நிலையில் மட்டுமன்றி பகுப்பாய்வு வழியான உய்த்தறி நிலைக்கு நகர்ந்து செல்ல ஆய்வின் அளிக்கைச் செம்மைக்கு இட்டுச்செல்கின்றது. அபிவிருத்தி தொடர்பான மேலைப்புலக்காட்சி , மற்றும் ஐரோப்பிய மையவாதத்துடன் சமூக நோக்குடைய கிழக்கியல்,மற்றும்இ மார்க்சியக் கருத்தியல் முரண்பாடு கொள்ளும் நிலையில்இ புதிய வளர்ச்சிகளை ஊடக நிலையிலும்இ தொடர்பாடல் நிலையிலும் ஆழ்ந்து விரிந்த பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருத்தல் ஆய்வுக்கு கனதியூட்டுகின்றது.

உள்ளடக்கம் : அபிவிருத்தியும் அபிவிருத்தி தொடர்பாடலும்,நாட்டார் ஊடகங்கள் ,தொடர்பாடல் நோக்கில் நாட்டார் நிகழத்து
கலைகள்: தகுதிகளும் தடைகளும்  ,அபிவிருத்தித் தொடர்பாடலில் நாட்டார் ,ஊடகங்களை பயன்படுத்துதல் துணை நூற் பட்டியல் (தமிழ்- ஆங்கிலம்),
பத்திரிகைகள்

Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Format

Pages

189

Publisher

Cambridge University Press

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.