Management Theories-முகாமைத்துவக் கொள்கைகள் – ஓர் அறிமுகம்

LKR 400.00

முகாமைத்துவக் கொள்கைகள் – ஓர் அறிமுகம் by சோ.சந்திரசேகரன் மா.கருணாநிதி Published by  சேமமடு பதிப்பகம் 2nd Edition @ 2020

சமூக அறிவியல் துறைகளில் பொருளாதார மேம்பாட்டுடன் தொடர்புடையதும் நேரடியாக வாழ்க்கைப் பயன்பாடுடையதுமான ஒருதுறை முகாமைத்துவம் எனலாம். இன்று முகாமைத்துவம் ஒரு புலமைசார் துறை என்ற முறையில் பெருவளர்ச்சி பெற்றுள்ளதோடு அத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பல  முகாமைத்துவக்கல்வி நிறுவனங்கள் உலகில் எழுந்துள்ளன. இத்துறைசார்ந்த ஆய்வாளர்கள் நூல்கள் சஞ்சிகைகளும் ஏராளம். ஐக்கிய அமெரிக்கா உலகில் பெரு வல்லரசானதற்கான காரணங்கள் பற்றிக் கூறும் முகாமைத்துவ மற்றும் எதிர்காலவியல் பெருமறிஞரான பீற்றர் ட்றக்கர் அந்நாட்டில் முகாமைத்துவத் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை ஒரு காரணமாகக் கூறுகின்றார். உலகளாவிய மகத்தான சாதனைகளுக்குப் பின்னணியில் (பிரமிட், சீனப் பெருஞ்சுவர்) ஏதோவொரு முகாமைத்துவம் இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று முகாமைத்துவம் நிறுவனங்களைப் பொறுத்த வரையில் மட்டுமன்றி குடும்பம், பொருளாதாரம், இனமுரண்பாடுகள், அறிவு, கோபம் என்பவற்றைப் பொறுத்தவரையிலும் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் நாற்பது சதவீதமான ஊழியர் தொகுதியினர் சாதாரண தொழிற்சாலை ஊழியராக இருந்தனர். முதலாம் யுத்த காலத்தில், முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காலத்தில் மக்களில் 35 சதவீதமானோர் வீட்டுப்பணியாளராகவே பணிபுரிந்தனர் என பீற்றர் ட்றக்கர் மதிப்பிடப்பட்டுள்ளார். இன்றைய அமெரிக்காவில் ஊழியர் தொகுதியில் 35 சதவீதமானோர் ‘முகாமையாளர்களும் உயர்தொழில் வல்லுநர்களும்’ எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

உள்ளடக்கம் : விஞ்ஞானப்பாங்கான முகாமைத்துவம்: ​Max Weber இன் பணிக்குழுவாட்சி, கல்வித் துறையில் விஞ்ஞானப் பாங்கான முகாமைத்துவம்,ஐக்கிய அமெரிக்கக்கல்வி முறையில் விஞ்ஞானப் பாங்கான முகாமைத்துவம்,முறைசார் மாதிரிகள்

மனித உறவுகள் அணுகுமுறை :  Mayo வின் சிந்தனைகள் – சில விமரிசனங்கள்,ஊக்கல் கொள்கையும் முகாமைத்துவமும்,ஊக்கல் கொள்கை – Motivational Theories , இரு காரணிக் கொள்கை,XY கொள்கை,தோழமை மாதிரியின் பிரதான அம்சங்கள்

சமூக அறிவியல் கொள்கை :  முறைமைக் கொள்கை, Getzels, Guba வழங்கிய கொள்கைகள்

SKU: 978-955-1857-07-3
Category:
Tags:,
Weight 0.425 kg
Dimensions 4 × 14 × 21 cm
book-author

,

Format

Pages

132

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.