வாழ்க்கை ஒரு பரிசு-Life Is a Gift

By (author)Gill Edwards

LKR 1,125.00

Life Is a Gift: A Practical Guide to Making Your Dreams Come True-வாழ்க்கை ஒரு பரிசு. by  கில் எட்வர்ட்ஸ் Translated by PSV .Kumarasuwami , Published by  Manjul  Publishing House,  Sixth Edition 2020

வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என்னைக் காட்டாறு போல இழுத்துச் சென்ற ஒரு அற்புதம் எனலாம். நிஜமாகவே படித்து முடித்ததும் வாழ்க்கை ஒரு பரிசு என உணர்கிறேன்.

கில் எட்வர்ட்ஸ் ஒரு உளவியல் மருத்துவர், ஆன்மீக எழுத்தாளர், லிவிங் மேஜிக்கலி,ஸ்டெப்பிங் இண்டூ த மேஜிக், ப்யூர் ப்லிஸ் ரூ வைல்ட் லவ் போன்ற நூல்களின் ஆசிரியை. தன்னுடைய ஒவ்வொரு கருத்திலும் அவர் நேர்மறை எண்ணங்களைப் பிரதிபலிப்பது போல் இதை மொழி பெயர்த்த பி எஸ் வி குமாரசாமியும் அட்சரம் பிசகாமல் அதை எதிரொலிக்கிறார்.இந்நூலே தகுந்த சமயத்தில் எனக்குக் கிடைத்த சமீபத்திய பரிசு. வாழ்க்கையை நொந்துகொள்ளாமல் பரிசாகப் பார்த்தல், ஈர்ப்பு விதியைப் புரிந்து கொள்ளுதல், பிரபஞ்சப் பிரவாகத்தில் ஒரு துளியாக இருந்தாலும் நம்மை உணர்தல்இ நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தப் பயிற்சி செய்தல் இவையே அவர் கூறும் தாரக மந்திரங்கள்.

வாழ்க்கை ஒரு பரிசு என்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ளுதல் முதல்படி. உங்கள் அக உலகம்தான் கண்ணாடியாகஇ புற உலகாகப் பிரதிபலிக்கிறது என்பது இரண்டாம் படி..

பிரபஞ்ச சக்தியின் போக்கோடு இணைந்து செல்லுங்கள் இது மூன்றாம் படி. நீங்கள் கேட்டதுதான் இதுவரை கிடைத்திருக்கிறது. உங்கள் மகிழ்ச்சி உங்கள் பொறுப்பு மட்டுமே. வாழ்க்கையைக் காதலியுங்கள்.

உங்கள் உள்ளக் கிடக்கையை அடக்க அடக்க அது பயம்இ துயரம் மனச்சோர்வாக கீழ்நிலையில் கிடத்துகிறது. ஏக்கம் வேண்டாம். எதிர்மறையான எதையும் கிட்டே சேர்க்காதீர்கள்

உங்கள் ஆசைகளுக்காக வாழத் துவங்கும்போது மேல் நிலையில் ஏறி அது அன்புஇ மகிழ்ச்சி இ சுதந்திரம்இ உற்சாகம்இ நம்பிக்கையாக உயர்வான உணர்வலைகளாகப் பரிணமிக்கிறது. உலகத்தில் எதுவும் யாருமே மோசமல்ல. அவர்கள் வழிப்படி அவர்கள் நடக்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கிடைக்கும்.

 

SKU: 978-81-8322-278-5
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

6th

Pages

247

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.