மக்களை கையாளும் கலை

By (author)Les Giblin

LKR 517.50

மக்களை கையாளும் கலை  by லெஸ் ஜிப்லின்
மற்றவர்கள் மீது ஏறிமிதித்து மேலே செல்லாதீர்கள் வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றம் உங்களுடைய சொந்த முயற்சி மற்றும் மதிப்பால் மடடடுமே நிர்ணயிக்கப்படுகின்றது.

வெற்றியாளர்கள் அனைவரிடமும் தவறாமல் இருக்கும் ஒரு பொதுவான அம்சம் எது தெரியுமா? அவர்கள் அனைவரும் மக்களைக் கையாளும் கலையில் கரை கண்டவர்களாக விளங்குகின்றனர் என்பதுதான் அது.

இந்நூல் கீழ்க்கண்டவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்:

• உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது எப்படி
• பிறரின் அகந்தையை லாவகமாகக் கையாள்வது எப்படி
• உரையாடல்களில் சிறந்து விளங்குவது எப்படி
• பிறரைத் தங்களைப் பற்றிச் சிறப்பாக உணர வைப்பது எப்படி

அலுவலகத்திலும் வீட்டிலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடைய வேண்டுமென்றால், மக்களைக் கையாளும் கலையில் நீங்கள் வல்லவராக ஆக வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து உத்திகளையும் இந்நூல் உங்களுக்கு அளிக்கும். அவற்றை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தத் தொடங்கினால், உங்கள் வளர்ச்சியைக் கண்டு நீங்களே அதிசயத்துப் போவீர்கள்

தனிநபர் வளர்ச்சித் துறையின் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கில்பின் 1912ல் பிறந்தவர். ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனையாளராக அவர் தன் தொழில்வாழ்க்கையைத் துவக்கி அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டார். மனித இயல்பைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றி முழுமையாகக் கற்றுக் கொள்ள இத்தொழில் அவருக்கு உதவியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் தலைசிறந்த விற்பனையாளர் பட்டத்தை இரண்டு முறை அவர் வென்றார். மக்களைக் கையாளும் கலையைப் பற்றியும் விற்பனைத் தொழிலில் சிறப்புறுவது எப்படி என்பது பற்றியும் அவர் பல பயிலரங்குகளை நடத்தியுள்ளார். அவர் ஒரு வெற்றிகரமான நூலாசிரியராகத் திகழ்ந்தார். அவருடைய புத்தகங்கள் பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன. மக்களைக் கையாளும் கலைதான் உங்கள் வாழ்வில் நீங்கள் கைவசப்படுத்த வேண்டிய இன்றியமையாத திறன் என்ற அவருடைய செய்தி, நேரடியாக அன்றி கருவிகள் வாயிலாகக் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுகிறது.

SKU: 978-93-87383-37-1
Category:
Tags:,
Weight 0.250 kg
Dimensions 21 × 14 × 2.5 cm
book-author

Edition

6th

Format

Pages

90

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.