பௌதிகப் புவியியல்:புவியின் அமைப்பும் அகச்செயன்முறையும்

By (author)S.Antony Norbet

LKR 400.00

பௌதிகப் புவியியல்:புவியின் அமைப்பும் அகச்செயன்முறையும் by  எஸ்.அன்ரனி நோர்பேட்  Published by சேமமடு பதிப்பகம் , 1st Edition

புவியியலின் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப் பாட நூல்களின் பற்றாக்குறையானது புவியியல் மாணவர்களினால் இன்று நன்கு உணரப்பட்டுள்ளது.  அத்துடன் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்று வரும் புதிய அறிவுத்தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஓர் அவசியத் தேவையையும் கொண்டுள்ளனர். இப் பின்புலத்திலேயே கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘பௌதிகப் புவியியல்: புவியின் அமைப்பும் அகச் செயன்;முறையும்;’  என்னும் தலைப்பில் இந்நூலை எழுத முற்பட்டோம். முன்னர் வெளிவந்த ‘பௌதிகப்புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்’ என்ற நூலின் இரண்டாவது பகுதியாக இது அமைகின்றது.
புவியின் அகச்செயன்முறைகள் மற்றும் அதனால் உருவாக்கப்படும் நிலவுருவங்கள் சார்ந்த விடயங்களை  விஞ்ஞான ரீதியாக மாணவர்கள்  கற்று விளங்கிக் கொள்வதற்கான ஒரு தேவையை இந்நூல் நிறைவு செய்யும் எனக் கருதுகின்றோம். உயர்தர மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக புவியியல் மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் கல்வித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளோம்.

உள்ளடக்கம் : பௌதிகப் புவியியல்: ஓர் அறிமுகம்,புவியின் உட்பாக அமைப்பு,கனிப்பொருட்களும் பாறைகளும்,அடையற் பாறைகளின் தோற்றமும் வகைகளும், உருமாறிய பாறைகளின் வகைகள்,கண்டங்களின் நகர்வும் சான்றுகளும்,தகட்டோட்டக் கோட்பாடும் கடல்-தரை பரவுதலும், எரிமலைகளின் செயற்பாடும்நிலவுருவங்களும் ,புவிநடுக்கங்கள், வானிலையாலழிதல்

SKU: 978-955-685-036-9
Categories:,
Tags:,
Weight 0.350 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Format

Pages

166

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.