டாக்டர் இல்லாத இடத்தில்

LKR 2,205.00

டாக்டர் இல்லாத இடத்தில் : உடல்ல்நலப் பராமரிப்புக் கையேடு by டேவிட் வெர்னர்..  Published by :அடையாளம் பதிப்பகம்

ஒவ்வொருவரும் தன் உடல்நலத்துக்கான பொறுப்பை அவரே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தக் கையேட்டின் விரிவாக்கப்பட்ட, புதிய பதிப்பு. மருந்துகளையும் மருத்துவர்களையும் கேள்வியற்ற முறையில் சாந்திருக்கக் கூடாது என்று எச்சரிக்கும், சமுதாயப் பொறுப்புமிக்கக் கையேடு. நோய் அறிகுறிகள், சிகிச்சை முறை, மருந்துகள் போன்றவற்றை எளிய முறையில் விளக்குகிறது. எந்தச் சூழ்நிலையில் மருத்துவ உதவியைக் கட்டாயம் நாட வேண்டும் என்பதை விளக்கிக் கூறுகிறது. உடல்நலனைப் பேண என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.

டாக்டர் இல்லாத இடத்தில் இது ஒரு முதலுதவி புத்தகத்திற்கும் மேலானது: பரந்துபட்ட மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற – வயிற்றுப்போக்கு முதல் காசநோய் வரை. பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கின்ற வீட்டு வைத்தியங்கள் முதல் நவீன கால மருந்துகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது வரை பல விஷயங்களைப் பேசுகிறது. சுத்தம், ஆரோக்கியமான உணவுமுறை, தடுப்பூசிகள் குறித்து இதில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப் , பட்டுள்ளது. மேலும், பிரசவம், குடும்பநலத் திட்டம் பற்றியும் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது, தாங்கள் சுயமாக என்ன செய்துகொள்ள இயலும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவது மட்டுமின்றி, எந்தெந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு நலப்பணியாளாரின் கவனிப்புத் தேவை என்பதை அறிவதற்கும் இது உதவுகிறது, விரிவாக்கப்பட்ட இந்தப் புதிய பதிப்பில் சில கூடுதலான உடல் நலப் பிரச்சினைகள், எச்ஐவி/எய்ட்ஸ், | டெங்குக் காய்ச்சல், கருச்சிதைவினால் ஏற்படும் சிக்கல்கள், மனநலப் பிரச்சினைகள், வாழ்க்கைமுறை | மாற்றத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் முதலான பல தலைப்புகளில் நிறைய தகவல்கள் இடம், பெற்றுள்ளதோடு, முந்தைய பதிப்புகளில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் குறித்த புதிய தகவல் சார்ந்த அறிவுரைகளையும் வழங்குகிறது.
இந்தப் புத்தகம் யாருக்கு… எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தங்களுடைய அன்றாட உடல்நலப் பிரச்சினைகளைக் _கவனித்துக்கொள்வதற்கு அவசியமானது இந்தப் புத்தகம், * நகரத்திலும் கிராமப்புறத்திலும் மருத்துவ வசதி இல்லாத இடங்களிலும் வசிப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பல பொதுவான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் அவற்றை அறிந்து சிகிச்சையளிப்பதற்கும் தங்களால் என்ன செய்ய இயலும் என்பதை அவர்களுக்கு இந்தப் புத்தகம் , எளிய சொற்களில் வரைபடங்களுடன் விளக்குகிறது, * கடைக்காரர் அல்லது மருந்தாளுநர் மருந்துகளையும் உடல்நலப் பராமரிப்புப் பொருட்களையும் | விற்பனை செய்கிறார், இந்த நூல், அவருக்குக் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு எந்தெந்த மருந்துகள் மிகப் பயனுள்ளவை என்பதை விளக்குவதோடு, பயனற்ற அல்லது அபாயகரமான | மருந்துகள் பற்றியும் எச்சரிக்கிறது. ஆபத்துகளும் முன் னெச்சரிக்கைகளும் கவனமாக | விளக்கப்பட்டுள்ளன. மரபுவழி. நவீன மருந்துகள் என இருவகை குறித்தும் அறிவார்ந்த பயன்பாட்டுக்குரிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது. பள்ளி ஆசிரியருக்கு சுத்தம், உடல்நலம், ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகள் குறித்து தன் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் கற்றுத் தருவதற்கான வழிகாட்டுதல்களை இந்நூல், வழங்குகிறது. அத்துடன் நோயாளிகளுக்கும் காயம்பட்டவருக்கும் நடைமுறை ஆலோசனையையும், கவனிப்பையும் வழங்குவதற்கும் இந்தப் புத்தகம் அவருக்கு உதவுகிறது. நலப்பணியாளர், கிராமத் தலைவர் அல்லது தன் சமூகத்தில் வசிப்பவர்களின் ஆரோக்கியம், நலவாழ்வு பற்றி அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘கிராம | நலப்பணியாளருக்கான அறிமுகம்’ என்னும் பகுதி மிகுந்த பயனளிக்கக்கூடியது. அதில் மக்களின் தேவைகளைக் கண்டறிவதற்கும், அறிவுப் பரிமாற்றத்துக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் சமூகத்தினரை ஈடுபடுத்துவதற்கும் உரிய வழிகள் விவாதிக்கப்படுகின்றன, – தாய்மார்களும் மருத்துவச்சியரும் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள எளிமையான, பயனுள்ள , தகவல்கள் மூலம் தாய்-சேய் நலம், குழந்தை பிறப்பு, குழந்தையின் ஆரோக்கியம் ஆகியவை பற்றிய விஷயங்களை நன்கு புரிந்துகொண்டு செயல்பட உதவுகிறது.

SKU: 978-81-7720-138-3
Category:
Tags:, ,
Weight 1.60 kg
Dimensions 28 × 18 × 6 cm
book-author

Edition

3rd

Format

Pages

804

Publisher

அடையாளம் பதிப்பகம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.