LKR 1,260.00LKR 1,305.00

இச்சா by ஷோபாசக்தி Published by கருப்புப் பிரதிகள், 1st Edition -2019

“தற்கொலை செய்துகொள்வதில்இ உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”

கொலைகளும், தற்கொலைகளும் நிரம்பிய சிறிய தீவான இலங்கையைச் சாபமும், இருளும் காலந்தோறும் துரத்துகின்றன. பௌத்தம் X சிறுபான்மையினரின் மதங்கள்இ தமிழ் , சிங்களம் என இரு அடிப்படை வேறுபாடுகளின் பின்புலத்தில் வன்மும்இ குரோதமும்இ வெறுப்பும் நாடெங்கும் பரவலானதற்குக் காரணம்இ வெறுமனே மதவெறி மட்டும்தானா? புத்தர் என்ற கருணையான ஆளுமையும்இ அவருடைய போதனைகளும் பெரும்பான்மையான சிங்களப் பிக்குகள் மனதில் சின்ன சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லையா? மனதில் துளியளவுகூட ஈரம் இல்லாதவர்களாகத் தீவின் சராசரி மனிதர்கள் மாறியுள்ளதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. தெருச்சந்தி முக்கு விளக்குத்தூண்இ கார் டயரினால் மனித உடல்களை உயிருடனோ அல்லது உயிரற்றோ எரிக்கப்படும் இடமாக மாறியதை வேடிக்கை பார்க்கிற சூழல்இ வன்முறையின் உச்சம்.

இன ஆதிக்க அரசியல் காரணமாகச் சிந்திய மனிதக் குருதியும்இ கொல்லப்பட்ட உடல்களும் குட்டித் தீவெங்கும் சிதறிக் கிடக்கின்றன. ஈழத் தமிழரின் போராட்டமும்இ அதற்கெதிரான சிங்களப் பேரினவாத ராணுவத்தின் ஒடுக்குமுறையும் 1981 இல் தொடங்கிஇ 2009 முள்ளிவாய்க்கால் அழித்தொழிப்பு வரை நீண்ட வரலாற்றுப் பின்புலமுடையன. எவ்விதமான அறமும் இல்லாமல் மனித உடல்களைத் துச்சமாகக் கருதிச் சிதலமாக்கிய கொடூரம்இ இலங்கையில் இயல்பாக நடந்தேறியுள்ளது. தமிழின விடுதலைக்கான இயக்கங்களின் போராட்டங்கள்இ குறிப்பாக விடுதலைப் புலிகளின் அரசுக்கெதிரான கடுமையான போர்இ சிங்களப் பேரினவாத அரசின் கொடூரமான ராணுவத் தாக்குதல்கள்இ இந்தியாஇ சீனா உள்ளிட்ட மேலைநாடுகளின் ஆதரவுடன் அழித்தொழிக்கப்பட்ட புலிகளின் ஆயுதப் போராட்டம்… வரலாற்றின் பக்கங்களில் ரத்தக் கவிச்சியடிக்கிறது. இரண்டாயிரமாண்டுத் தமிழர் வரலாற்றில் பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற ஆயுதயமேந்திய ஈழப் போர்இ ஒப்பீடு அற்றது; காத்திரமானது. புலிகளின் வீரமான போர்களும்இ புலிகள் அழித்தொழிக்கப்பட்ட பேரழிவும் அழியாத நினைவுகளாக காற்றில் மிதக்கின்றன.

SKU: 978-81-9433-100-1
Categories:,
Tags:, ,
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

304

Publisher

கருப்புப் பிரதிகள்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.