டாக்டர் இல்லாத இடத்தில்’ நூலையும் வேறு பல மருத்துவ விழிப்புணர்வு வழிகாட்டிகளையும் வெளியிட்டுள்ள ஹெஸ்பேரியன் அறக்கட்டளை, டேவிட் வெர்னர் உருவாக்கியதே. தற்போது ஹெல்த்ரைட்ஸ் என்ற அமைப்பு சார்பாகச் செயல்பட்டு வரும் டேவிட் வெர்னர், பொதுச் சுகாதாரச் செயல்பாடுகளில் 40 ஆண்டு அனுபவம் மிக்கவர்.பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேசப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் வருகைதரு பேராசிரியர். 50 நாடுகளில் சுகாதாரப் பயிலரங்குகள், பயிற்சிகளை வழங்கியுள்ள அவர் யுனிசெஃப், உலகச் சுகாதார நிறுவனம், யு.என்.டி.பி., உள்ளிட்ட அமைப்புகளின் ஆலோசகர்.