அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும்

LKR 560.00

அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும் by  க.சின்னத்தம்பி க.சுவர்ணராஜா Published by சேமமடு பதிப்பகம்
இந்நூலின் பருமனை மட்டுப்படுத்தும் நோக்கில் மிக முக்கிய மான சில அறிகைத் தொழிற்பாடுகள் மட்டும் இங்கு இடம்பெறு வதுடன்இ பல கருத்துக்கள் சுருக்கமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், பிரதானமான உளவியற் கருத்துக்கள் விரிவான விளக்கம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களில்இ குறித்த உளவியலாளர்களின் ஆய்வு தொடர்பானஇ எளிமையான பரிசோதனைகளின் விபரங்களுக் கும் வியாக்கியானங்களுக்கும் இந்நூலில் இடமளிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள விடயங்களின் ஒழுங்கமைப்பானது, கல்வி உளவியலறிவைப் பெறுவதில் ஆசிரியரின் நிலைப்பாட்டை முதன்மையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி உளவியல் பற்றிய ஒரு பொதுவான விளக்கத்தினை வழங்கும் வகையில் முதலாவது இயல் சுருக்கமாக அமைகின்றது. கற்றலில் கவனமும் புலக்காட்சியும் மிக முக்கியமான பங்கினை வகிப்பதுடன்இ சிறந்த புலக்காட்சி பெறுதல் சிறந்த கற்றலின் அடிப் படையாக அமைவதனைக் கருத்திற்கொண்டு இவ்விடயம் இரண் டாம் இயலில் எடுத்தாளப்பட்டுள்ளது. கற்கப்பட்டவை கற்போனின் மனதில் நிலை நிறுத்தப்படுதலும்இ வேண்டும்போது அவை நினைவுப் படுத்தப்படுதலும் கல்வியின் ஒரு பிரதான நோக்கம் மட்டுமன்றிஇ நாம் எல்லோரும் விரும்பும் ஒரு நிலைப்பாடுமாகும். இது கற்பிப் போனும் அக்கறை கொள்ளும் ஒரு விடயமாகும். இவ்விடயம் பற்றிய கருத்துக்கள் இயல் மூன்றில் விரிவாக நோக்கப்படுகின்றன.
கற்றலின் முதற்படி எண்ணக்கருக்கற்றலாகும். புலக்காட்சி பெறுதலும், பெறப்பட்ட புலக்காட்சிகள் ஞாபகத்திலிருத்தலும் எண் ணக்கரு உருவாக்கத்தின் பிரதான படிகளாகும். இவற்றினைக் கொண்டு எண்ணக்கரு உருவாக்கம் பற்றி அடுத்த இயல் விரிவடை கின்றது.
கற்றல் என்பதனாற் கருதப்படுவது யாது? அது எவ்வாறு நிகழ்கின்றது. கற்றலுடன் தொடர்புடைய காரணிகள் யாவை? வகுப் பறைக் கற்றலை மேம்படுத்தும் வழிமுறைகள் யாவை? இவை போன்ற இன்னோரன்ன வினாக்களுக்கு விடைகாணும் தேவை ஆசிரியருக்குண்டு. இதன் பொருட்டுஇ பல்வேறு உளவியலாளர்க ளினதும் கற்றல் பற்றிய கருத்துக்கள்இ கோட்பாடுகள் என்பன அடுத்து வரும் இரண்டு இயல்களையும் அலங்கரிக்கின்றன. தூண்டல் – துலங்கல் வகையிலான கற்றலுடன் தொடர்புபட்ட கொள்கைகள் இயல் ஐந்திலும், கள- அறிகைக் கற்றற் கொள்கைகள் இயல் ஆறிலும் இடம்பெறுகின்றன.
கற்கப்படும் எவ்விடயமும் பின்னால் வரும் நிலைமைகளில் பயன்படுத்தப்படக்கூடியனவாக அமைய வேண்டுமென்பதே கல்விச் செயற்பாடுகளின் ஒரு பிரதான நோக்கமாகும். எனவேஇ குறித்த ஒரு வேளையில் ஏற்படுத்தப்படும் கற்றலானது எதிர்காலத் தேவைகட் கும் பிரயோகிக்கப்படக்கூடியவாறு அமைய வேண்டும். இந்த அம்சத்துடன் தொடர்புடைய கற்றல் இடமாற்றம் பற்றிய கருத்துக்கள் இறுதி இயலில் இடம்பெறுகின்றன.
ஆங்கில மொழிமூலமான வெளியீடுகளுடாக இத்துறைசார் அறிவினை மேம்படுத்த விளைவோரின் நலன்கருதி, இந்நூலில் இடம்பெறும் பிரதான உளவியற் பதங்களின் ஆங்கில வடிவத்தினை உள்ளடக்கிய கலைச் சொல் தொகுதியும், துணை நூற்பட்டியலும் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் முக்கியமான கருத்துக்கள் அல்லது விடயங்கள் அமைந்துள்ள இடங்களை நூலிற் சுலபமாகக் கண்டறிய வழி செய்யும் வகையில் விடயச்சுட்டி பின்னி ணைப்பில் இடம்பெறுகின்றது.

SKU: 978-955-1857-96-7
Categories:,
Tag:
Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

,

Edition

1st

Format

Pages

216

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.