தனுஜா: ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்

LKR 1,400.00LKR 1,485.00

தனுஜா: ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் by தனுஜா சிங்கம், Edited by ஷோபா சக்தி, Published by  கருப்புப் பிரதிகள்,  1st Edition 2021

ஒரு திருநங்கையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மற்றவர்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. பொது அறங்களால்இ பொதுநீதிகளால்இ பொதுக் கலாச்சாரங்களால்இ பொது இலக்கியங்களால்இ பொதுத்தத்துவங்களால் எங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. வரலாறு முழுவதுமே வஞ்சிக்கப்பட்டவர்களான எங்களது பயணம் புதிர்வட்டப்பாதை. இந்தப் புதிரை இதுவரை யாரும் அவிழ்த்ததில்லை. நாங்கள்கூட அவிழ்த்ததில்லை” – தனுஜாஇ ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்.

பால்புதுமையினர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கும்போதோ அல்லது தொடர்கள் பார்க்கும்போதோ அதில் செக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தியச்சூழலில் அவை சென்சார் செய்யப்பட்டே தான் எழுதவோ காட்சிப்படுத்தவோ செய்யப்பட்டிருக்கும். ஆனால் தனுஜாவின் புத்தகத்தில் நிறைய பாலியல் நிகழ்வுகள் இருக்கின்றன. அவை வெளிப்படையாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. அதையும் ஒரு முக்கியமான விஷயமாகப் பார்க்க முடிகிறது.

பால்புதுமையினர் தங்கள் கதைகளை எழுதும்போது பொதுச் சமூகத்துக்கு அவர்கள் மேல் புரிதல் ஏற்படும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அந்த கதைகள் பல பால்புதுமையினருக்கு தைரியத்தைக் கொடுக்கும். தங்களது வரலாறும் ஆவணப்படுத்தத் தகுதியானவையே என்கிற தன்னம்பிக்கையையும் கொடுக்கும். மேலும் பல புத்தகங்கள் உருவாகக் காரணமாக இருக்கும். அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் தனுஜாவின் தன்வரலாற்றுப் புத்தகம் புத்தகம் நிச்சயமாகக் கொடுக்கிறது.

SKU: 978-81-943310-6-3
Categories:,
Tags:, ,
Weight 0.780 kg
Dimensions 4 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

352

Publisher

கருப்புப் பிரதிகள்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.