உள்ளம் பெருங் கோயில்

LKR 390.00

உள்ளம் பெருங் கோயில் by Kokila Mahendiran-கோகிலா மகேந்திரன் Published by சேமமடு பதிப்பகம் ,1st Edition

சீர்மிய உளவியலையும் ஆக்க மலர்ச்சிச் சிந்தனைகளையும் ஒன்றி ணைத்துத் தமிழிலே வளமான எழுத்தாக்கங்களைத் தரவல்ல ஒரு சிலரில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் தனித்துவமானவர். அவரது ‘உள்ளம் பெருங் கோயில்’ என்ற படைப்புஇ தமிழின் சீர்மிய இலக்கிய ஆக்கத்தை மேலும் வளப்படுத்தும் புதுவரவாகின்றது.
ஆழ்ந்தும் நுண்ணிதாகியும் வளர்ந்து செல்லும் உளவியல் ஆய்வு களின் விளைவீட்டும் முடிவுகளை எழுத்தாக்கங்கள் வழியே எடுத்துச் சென்று அறிபரவல் (னுளைளநniஅயவழைn ழக மழெறடநனபந) செய்தல் சமகாலச் சமூகத்தின் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் மேலெழுந்துள்ளன. அத்தகைய ஓர் அறிகைச் செயற்பாட்டை ஆழமாகவும்இ நிதானமாகவும்இ அறிவுசார்ந்த பக்குவத்துடனும்இ நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார்.
தனிமனித உளக்கோலங்களின் சமூகத் தளத்தையும் சமூக இருப் பையும் கண்டறிய முற்பட்டமை உளப் பிரச்சினைகளுக்குரிய விசை பற்றிய தரிசனத்திலே பன்மை நிலைகளை ஏற்படுத்தலாயிற்று. சமூகத்தின் பன்மை நிலைகள் பற்றிய கவன ஈர்ப்பு உலக உளவியற் புலத்திலே ஏற்படலாயிற்று. சமூகத்தின் பன்மை விசைகளும் அவற்றின் தாவல் களும் மனிதர் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும் பன்முகமான பிரச்சி னைகளை வருவிக்கத் தொடங்கியுள்ளன.
உளப் பிரச்சினைகள் தொடர்பான அறிகைத் தெளிவை ஏற்படுத்து தல் நூலின் வினைபாட்டுப் பரிமாணமாகவுள்ளது. எமது சமூகத்தைப் பொறுத்தவரை சீர்மியம் தொடர்பான அறிகைத் தளத்திலே ‘தொடர்பாடல் இடைவெளிகள்’ காணப்படுகின்றன. அந்நிலையிலே தெளிவான அறிகைப் புலக்காட்சியை ஏற்படுத்தும் புனைவுகளும் நூலிலே முன் னெடுக்கப்பட்டுள்ளன. ‘சீர்மியம் என்றால் என்ன?’ என்பதும் ‘சீர்மியர் எப்படி இருப்பார்?’ என்பதும் மேற்கூறிய இடைவெளிகளின் தகர்ப்பாக அமைந்துள்ளது.
உளவியற் சிந்தனா கூடங்கள் ஒவ்வொன்றும் தத்தமக்குரிய கருத் தியல் நிலைகள் தழுவிய சீர்மிய அணுகுமுறைகளையும்இ மீண்டெழு வதற்குரிய நுண்உபாயங்களையும்இ முன்வைத்துள்ளன. அறிகை உளவியல்இ நடத்தைஉளவியல்இ மானிடஉளவியல்இ உளப்பகுப்பு உளவியல் என்ற வாறு அனைத்துச் சிந்தனா கூடங்களையும் உள்ளடக் கிய ‘உறுவிரிகை’ அணுகுமுறை நூலாக்கத்திலே மேற்கொள்ளப்பட் டுள்ளது.
மனவெழுச்சி நுண்மதி பற்றிய ஆய்வுகளும் அதன் செயற்பாட்டுப் பயன்களும் அண்மைக்காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மன வெழுச்சிகளை நேர் வெளியீட்டு வாய்க்காற்படுத்தல்இ முகாமை செய்தல்இ ஆக்க மலர்ச்சிக்கு உட்படுத்துதல் முதலியவை சீர்மிய முன்னெடுப்பின் பரிமாணங்களாகின்றன. மனவெழுச்சிகளை ‘மனச் சுகவனைதலுக்கு’ உட்படுத்தும் கருத்துக்களின் களஞ்சியமாகவும் நூலாக்கம் எழுச்சி கொள்கின்றது.
நாளாந்த வாழ்வியலின் எதிர் அனுபவங்களோடும்,பிரச்சினைக ளோடும்,அதிர்வுகளோடும், மனத்தாக்கங்களோடும் ‘ஊடு தலையீடு’  செய்யும் நுட்பவியல்கள் நூற்பரப்பிலே பலநிலைகளில் இடம்பெற்றுள்ளன. தன்னிலை பற்றிய சமநிலையான வளர்ச்சிக் கும்இ சமூகப் புரிந்துணர்வுடன் இணைந்த முன்னேற்றத்துக்கும் தம்மைத் தாமே உளவளஞ் செய்து கொள்வதற்கும்இ நேர்நிலைக் கிளர்ந்தெழலை மேற்கொள்வதற்கும் வல்ல நூலாக்கமாக ‘உள்ளம் பெருங்கோயில்’ அமைந்திருத்தல் மிகைப்படாத ஓர் உற்று நோக்கலாகும்

SKU: 978-955-1857-56-1
Categories:,
Tag:
Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

184

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.