Personality Psychology-ஆளுமை உளவியல்

LKR 370.00LKR 380.00

ஆளுமை உளவியல் by மணியம் சிவகுமார் Published by சேமமடு பதிப்பகம்  , 2nd Edition

மனித ஆளுமை சமூக வரலாற்றின் தொடர்ச்சியான பதிவுக ளால் உருவாக்கப்படுகின்றது. சமூக இருப்பு  ஆளுமை யின் இருப்பாகின்றது. சமூக நிர்ணயிப்பின் பொருண்மியக் காரணி களின் வளர்ச்சியும் அவற்றினூடே தோற்றம் பெறும் பன்முகப் பாங்கு களும் ஆளுமையிலே பன்முகத் தோற்றப்பாடுகளையும் பன்முக உறு பண்புகளையும் உருவாக்கிய வண்ணமுள்ளன. தனிச் சொத் துரிமையின் வளர்ச்சியோடு மனிதரின் தனித்துவங்களைக் கண்டறி யும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படலாயின. மனிதர் பிரபஞ்சத்தின் நடுவன் பொருளாக்கப்பட்டனர். அந்நிலையில் ஆளுமை, தலைமைத்துவம் போன்ற எண்ணக்கருக்கள் உளவியலின் ஆய்வுப் பொருட்களாயின.
மேலைப்புலத்தில் வளர்ச்சி பெற்ற உளவியற் சிந்தனா கூடங்க ளாகிய உளப்பகுப்புவாதம், நடத்தைவாதம், அறிகைவாதம், மானிட வாதம் முதலியவற்றை அடியொற்றி ஆளுமை உளவியலை நண்பர் மணியம் சிவகுமார் இந்நூலில் அனைத்தடக்க  முறை யில் விளக்கியுள்ளார்.
சமூகத்திலே காணப்படும் சுரண்டலும், பறிப்பும், முறியடிப்புப் போட்டிகளும், மேலெழ முடியா அவலங்களும் மனித ஆளுமையில் உதிர்வுகளையும் சிதறல்களையும், உடைதல்களையும் ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அந்நிலையிலே தோற்றம்பெறும் ஆளுமை வகைப் பாடுகளும் இயல்புகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்:  ஆளுமை ஓர் அறிமுகம்,ஆளுமை வகைகள்,கருத்துத் திரிபு ஆளுமை,உளச் சிதைவு ஆளுமை,தவிர்ப்பு ஆளுமை,வரம்பு ஆளுமை
நடிப்பு ஆளுமை,தன் வழிபாட்டு ஆளுமை,சார்புநிலை ஆளுமை,கட்டாய ஆளுமை,பணிவு தாக்;குதல் ஆளுமை,சமூக எதிர்ப்பு ஆளுமை,ஆளுமைக்கூறுகளும் பேச்சுக் கோளாறுகளும்,ஆளுமைக் கோட்பாடுகள்,மனித இனநல இருத்தல் நிலைக் கோட்பாடு,வகையியல் கோட்பாடு,  உளப்பகுப்புக் கோட்பாடு,சமூகத் தன்முனைப்புக் கோட்பாடு,ஆளிடைக் கோட்பாடு,நடத்தைக் கோட்பாடு,ஆளுமைச் சோதனை முறைகள்,பேட்டி முறை ,தனியார் வரலாற்று முறை ,மதிப்பீட்டு முறை,கனவுப் பகுப்புமுறை,பொருள் இணைத்தறி சோதனை, சொல் இயைபுச் சோதனை, தன் விபரப்பட்டியல்கள் , தன்விளக்க வினா நிரல்கள்

SKU: 978-955-1857-54-7
Category:
Tag:
Weight 0.350 kg
Dimensions 2.5 × 14 × 21 cm

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.