உலகக் கல்வி வரலாறு

LKR 380.00

உலகக் கல்வி வரலாறு by சபா.ஜெயராசா published by சேமமடு பதிப்பகம்
தமிழில் ‘உலகின் கல்வி வரலாறு’ தொடர்பான எந்தவொரு நூலாக்கமும் இதுவரை வெளிவரவில்லை. இதுவே இத்துறையில் வெளிவரும் முதல் நூலாகவும் முன்னோடி நூலாகவும் அமை கின்றது. உலகக் கல்வி வரலாறு பல்வேறு தொகுதிகளில் எழுதப்படவேண்டிய பெரு நிலைப்பரப்பாகும். இந்நூல் அந்தப் பெரும் பரப்பைச் சுருக்கிச் சிமிழ் நிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்பணி மிகவும் சிக்கலானது. இத்தகைய பணியை நூலாசிரியர் துணிந்து மேற்கொண்டுள்ளமை பாராட்டுக்குரியது.
பொருத்தமான தலைப்புகளிலே உலகக் கல்வி வரலாற்றை நிரற்படுத்தி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. தொன்மையான கிரேக்கக் கல்வி மாத்திரமன்றி தமிழகக் கல்வியும் இந்நூலிலே இடம்பெற்றுள்ளமை குறித்துரைக்கப்படக் கூடிய சிறப்பம்சம் ஆகின்றது. மேலைப்புல கல்வி வரலாற்றாசிரி யர்கள் தொன்மையான தமிழகக் கல்வி பற்றி குறிப்பிடாத நிலையில் இந்நூலாசிரியரின் முயற்சி பயனுள்ள ஆவணப்படுத்தலாகவும் இத்துறையில் மேலும் பல ஆய்வுகளை முன்னெடுப்பதற்குரிய ஆற்றுப்படுத்தலாகவும் அமையும். இந்நூல் கல்வி வரலாற்றின் சில அடிப்படைத் தளமாற்றங்களை கட்டுமானம் செய்ய விளைகின்றது.

Weight 0.250 kg
Dimensions 2 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

112

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.