ஆய்வு முறையியல் by சபா.ஜெயராசா Published by சேமமடு பதிப்பகம்
சமகாலத்தில் ஆய்வு முறைமை என்பது தனிப்பெரும் துறையாகப் புலமை உலகில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆய்வியலை தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியை பல்வேறு ஆய்வாளர்களும் மேற்கொண்டுவருகின்றனர்.
பொதுவாக ஆய்வு என்பது கேள்வியின் அடிப்படையில்தான் தொடங்குகிறது. கேள்விகள்தான் ஆராய்ச்சிகளுக்கு அடிப்படை. பெரும்பான்மையான கேள்விகளுக்கு தகவல்களின் அடிப்படையில் விடைகாண இயலாது. பல கேள்விகளுக்கான விடைகள் சிந்தனைகளாகின்றன. சிந்தனைகள் தனிமனித மேம்பாடுஇ சமூக மேம்பாடுஇ சமயச் சீர்திருத்தம் மற்றும் அரசியல்இ பொருளியல்இ சமூகவியல்இ உளவியல்இ கல்வியியல் போன்ற துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் எல்லாச் சிந்தனைகளும் ஆராய்ச்சியாகிவிடாது. சிந்தனைகள் ஆய்வுக்கு அடிப்படை ஆகலாம்.
ஆய்வின் முக்கிய நோக்கமே அறிவுப் பரப்பில் ஒரு செயற்கையாக அமையக் கூடிய புதிய பொருளை அறிவதே ஆகும். ஆய்வு என்பது தேடுதலாக அமையும் பொழுது அதன் விளைவு புதிய கண்டுபிடிப்பாகஇருக்க வேண்டும். இத்தகைய கண்டுபிடிப்பு ஏற்கெனவே உள்ள அறிவுப் பரப்பில் புதிய பரிமாணமாக அமைய வேண்டும். இவ்வாறு அமைய ஆய்வாளரின் உண்மையைத் தேடும் இயல்பும் நுண்பார்வையும் மிக அவசியம். ஆகவே ஆய்வு என்பது புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய முடிவுகளையும் வெளிப்படுத்தவேண்டும். முன்னர் கண்டறிந்த முடிவுகளையே திரும்பக் கூறுவதோ விரிவுபடுத்தி விளக்குவதோ ஆய்வாக அமையாது. முன்னர் தெரிந்த செய்தியோடு தெரியாத ஒன்றை சேர்ப்பதுதான் அறிவுப் பெருக்கத்திற்கு அல்லது அறிவு விரிவாக்கத்திற்கு உதவும். ஆய்வு என்பது ஒரு கிளர்ச்சியான முழு மன நிறைவுடைய அறிவு சார்ந்த செயற்பாடாக அமைய வேண்டும்.
ஒரு மொழியின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கு அந்த மொழியில் நிகழ்த்தப்படும் திட்பநுட்பமான ஆய்வுகளும் சுட்டிகளாக விளங்குகின்றன. ஆழமான ஆய்வுகளை தமிழில் மேற்கொள்வதற்கு ஆய்வியல் பற்றிய நூல்கள் அடிப்படையானவை. ஆய்வு முறையியல் எனும் நூலானது நவீன ஆய்வியலை தமிழுக்கு
அறிமுகப்படுத்தும் அடிப்படை நூலாகவும் வழிகாட்டி நூலாகவும் ஆக்கம் பெற்றுள்ளது.









