இளைஞர் சாரணீயம்-Scouting for Boys

LKR 700.00

இளைஞர் சாரணீயம் by பேடன் பவெல் பிரபு  Published by குமரன் புத்தக இல்லம்.

நாட்டுப்பற்றும்இ எப்போதும் பிறருக்கு உதவுவதுமே என் மூச்சு எனும் தாரக மந்திரத்தை உலகுக்கு எடுத்துக்காடியவர் ‘றாபட் ஸ்டீவன்சன் ஸமித் பேடன் பவல் பிரபு’ ஆவார்.

உலக சாரணியத்தின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற பேடன் பவல் மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த தலைமகன் 1857 பெப்ரவரி 22 ஆம் திகதி பிறந்த தினமே பேடன் பவல் தினம் அல்லது ஸ்தாபகர் தினமாகும். இங்கிலாந்தில் பிறந்து தனது 19 ஆம் வயதில் இராணுவச் சிப்பாயாக பயிற்சி பெற்றதன் பின் இந்தியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளுக்கு சென்ற வேளைகளில் தான் நேரில் கண்ணுற்ற பல்வேறு மனித இம்சைகளையும்இ அமைதியற்ற வாழ்வின் விளிம்பில் ஏங்கித் தவித்த மனித அவலங்களையும் பவல் கண்டு கொண்டதன் பின்னர் மீண்டும் இங்கிலாந்து வந்து இதற்கு விடிவுகாணும் நோக்குடன் 1907 ஆம் ஆண்டில் பிறவுன்ஸி தீவில் 20 மாணவர்களுடன் சிந்தித்ததன் வெளிப்பாடு சாரணியத்தின் முதல் ஒன்றுகூடலாக மலர்ந்தது.

ஒரு தனிமனிதன் மதம் கலாசாரத்திற்கு அப்பால் ஒரு புதிய சமூகத்தையே வெளிக்கொணர வைத்ததற்கு தன்னலமற்ற தியாக உணர்வும், மனித கெளரவத்தினை மதிக்கின்ற பண்பினையும் கொண்டதன் விளைவு இன்று இச் சாரணிய அமைப்பினுள் சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்வாங்கப்பட்டதன் மாயசக்தி பேடன் பவலினது சிந்தனையின் வெளிப்பாடு மனிதனை மனிதனாக மதிக்கின்ற சாரணியத்தினது தோற்றுவாய் மிகவும் நேயமுடையதாய் காணப்பட்டதேயாகும்.

இன்றைய கல்வியின் நோக்கங்களில் மிகவும் பிரதானமானவை ‘நாட்டுக்குகந்த சிறந்த நற்பிரஜையை தோற்றுவிப்பதேயாகும்’ அத்துடன் தேசிய குறிக்கோளின் முதன்மை வகிக்கின்ற ‘மனித கெளரவத்தைக் கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருக்குள் தேசியப் பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்தலாகும்’ இதனையே சாரணியத்தின் அடிப்படைத் தத்துவங்கள் எடுத்தியம்புவது சிறப்பம்சமாகும்.

SKU: 978-955-659-539-0
Categories:, ,
Tags:,
Weight 0.250 kg
Dimensions 1.5 × 14 × 21 cm
book-author

Edition

27th

Format

Publisher

Kumaran Book House-குமரன் புத்தக இல்லம்

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.