நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு-What to Say When You Talk to Your Self

LKR 1,345.50

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு : உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளும் போது என்ன சொல்ல வேண்டும் ? by ஷாட் ஹெம்ஸ்டெட்டர் Published by Manjul Publishing House , 3rd Edition

ஒருவரது உயர்வையும் தாழ்வையும் தீர்மானிக்கிற முக்கியமான காரணிகளில் ஒன்று சுயமதிப்பு.
சாதனை வாழ்க்கை வாழவேண்டும் என்றால் முதலில் நமது சுய மதிப்பை உயர்த்தவேண்டும்.
சிறு வயதில் இருந்து நாம் பெற்ற சிறியஇ பெரிய வெற்றிகளை மனதுக்குள் காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும். எதிர்காலத்தில் நமக்குப் பிடித்த துறையில் நாம் சாதிக்கவிருக்கும் வெற்றிகளை காட்சிப்படுத்திப் பார்க்கவேண்டும். நிகழ்காலத்தில் நம் மனதுக்குள் நிகழ்த்தும் உரையாடலை நேர்மறையாக அமைக்கவேண்டும்.
உங்கள் சுயபேச்சு எப்படி இருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். தினம்தோறும் நாம் நமக்குள் 50 ஆயிரம் முறை பேசிக்கொள்வதாக உளவியல் நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ‘எல்லோரும் என்னை விரும்புகிறார்கள்’இ ‘என்னால் முடியும்’இ ‘நான் சாதித்துக் காட்டுவேன்’ என்பதுபோன்ற நேர்மறையான சுயபேச்சு கொண்டவர்கள் அனைவரும் ஜெயிக்கிறார்கள்.
நம்மில் பலரும்இ நம்மைப் பற்றிய சுயமதிப்பீட்டை குறைவாகவே வைத்திருக்கிறோம். ‘நம்மைச் சுற்றியுள்ள சில வெற்றியாளர்களைப் போல் நமக்கு அறிவு இல்லைஇ ஆற்றல் இல்லை’ என்பதுபோன்ற தாழ்வான எண்ணங்கள் நமக்குள் தலைதூக்குவது இயல்பு. சற்றே அறிவுபூர்வமாகச் சிந்தித்தால் நம்மைப் பற்றிய அந்தக் கருத்துக்கள் தவறானவை என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
‘இந்த உலகில் எல்லாக் குழந்தைகளுமே மேதைகளாகத் தான் பிறக்கிறார்கள்’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் மகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மேதைகளாகப் பிறந்த நாம் எதற்கு சராசரி வாழ்க்கைக்குள் முடங்கவேண்டும்?
சராசரி வாழ்க்கையைப் புழுக்கள் கூட வாழ்ந்து முடித்து விடமுடியும். நாம் சாதனை வாழ்க்கையை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.
இன்று முதல் உங்கள் சிந்தனையை தன்னம்பிக்கை மிக்கதாக மாற்றுங்கள். உங்கள் சுயபேச்சை நேர்மறையானதாக மாற்றுங்கள். நிமிர்ந்த நன்னடைஇ நேர்கொண்ட பார்வையுடன்இ தலைநிமிர்ந்து வாழுங்கள்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் மனைவியும்இ பெண்ணுரிமைப் போராளியுமான எலியனார் ரூஸ்வெல்ட்டின் வரிகள் “தங்கள் கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கே எதிர்காலம் சொந்தம்.”
வாழ்க்கையில் உயரவேண்டுமானால் நாம் உயர்ந்து விட்டது போன்ற வரை படத்தை நம் மனதிற்குக் கொடுக்க வேண்டும். நாம் விரும்பும் பணத்தை வேண்டுமானால் அத்தகைய பணத்தைப் பெற்றுவிட்டது போன்ற நினைப்புடன் கூடிய வரைபட வடிவத்தை நம் மனதிற்குக் கொடுக்க வேண்டும்.
விளையாட்டில்இ கவிதையில்இ காமெடியில்இ வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பது போன்றதொரு தோற்றத்தை நாம் நம் மனதிடம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அது நமக்குக் கிடைக்கும்
நாம் நம் மனதிற்குக் கொடுக்கின்ற வரைபடத்தை
(1) எதிர்மறை – ஏற்புநிலை
(2) சுயபேச்சு – மாற்றத்திற்கான தேவையை அங்கீகரிக்கும் நிலை.
(3) மாறுவதற்கான தீர்மானம் – மேற்கொள்ளும் நிலை
(4) சுய பேச்சு – மிகச் சிறந்தவராகும் நிலை
(5) சுயபேச்சு – சுய பிரகடனம்
. மற்ற நிலைகளை விட இறுதி இரண்டு நிலைகளும் நமக்குப் பெரும் உதவியாக இருப்பதுடன் நாம் உயர்வதற்கு வழி வகுக்கும்
முயன்றுதான் பார்ப்போமே!
வெற்றி நிச்சயம்

SKU: 978-81-8322-338-6
Category:
Tags:,
Weight 0.350 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Edition

2nd

Format

Pages

272

Publisher

மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்-Manjul Publishing House

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.