கல்வித் தத்துவம்

LKR 860.00

கல்வித் தத்துவம் by சந்திரசேகரம் பத்தக்குட்டி Published by சேமமடு பதிப்பகம்
கல்வியின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளல், ஆசிரிய தொழிற் பயிற்சியின் ஒரு முக்கிய அங்கமாக இன்று விளங்குகின்றது. இதிற் கல்வித் தத்துவம் என்கின்ற கல்வி மொழியியலும் உள்ளடங்கும்.
‘கல்வித்தத்துவம்’ என்னும் இந்நூற் கல்வித்தத்துவம் பயில்வோருக்குப் பயன்படக்கூடும். ஆனால் இது எந்த ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்திற்கும் அமைய எழுதப்பெற்ற நூலன்று. பாடநூலாகவோ அல்லது கல்வித்தத்துவம் புகட்டும் ஆசிரியர்களது கைந்நூலாகவோ அமைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப் பெற்றதுமன்று. இந்நூலை யான் ஆக்கியதன் நோக்கம் கல்வித் தத்துவத்தைப்பற்றி யான் கற்றுச், சிந்தித்துச் சுவைத்து இன்புற்றவற்றை ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கமையத், தமிழ்கூறு நல்லுலகிலுள்ள என் பிற சகோதரர்களும் சுவைத்து இன்புற வேண்டும் என்ற பேரவாவேயாகும்.
அமைப்பு என்பவற்றால் வரையறை செய்யப் படுகின்றது. ஆகையாற் கல்வித் தத்துவத்தைக் கருத்தூன்றிக் கற்கும் ஒருவர் இவற்றைப் புறக்கணித்துவிட முடியாது. ஆகையினாலேயே ‘கல்வியும் பொருளாதாரமும்’, ‘கல்வியும் அரசியலும்’, ‘சமூகக்கல்வி’ என்னும் கட்டுரைகளை இந்நூலின் கண் சேர்த்துள்ளேன்.
கலைத்திட்டம் பற்றிய வரைவிலக்கணம், அதன் அமைப்பு, இலங் கையின் கலைத்திட்டம் ஆகியன எமது நாட்டின் கல்விமுறையில் இன்றைய தேவைகளை விளக்குமுகமாக எழுதப்பெற்றவையாகும்.

Weight 0.350 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Edition

1st

Format

Pages

228

Publisher

சேமமடு பதிப்பகம்-Chemamadu Publication

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.