அமெரிக்கப் போரின் ரகசிய வரலாறு பாகம் -2

LKR 1,710.00

அமெரிக்கப் போரின் ரகசிய வரலாறு பாகம் -2 by ஜான் பெர்கின்ஸ் தமிழில் அசேகன் முத்துசாமி
பொருளாதார அடியாட்கள் ரகசிய உளவாளிகள் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்

‘The Secret History of the American Empire’ என்ற ஆங்கிலத் தலைப்புக் கொண்ட இப்புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் தனது வாழ்வு அனுபவங்களை அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார். அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சியினையும், கம்யூனிச எதிர்ப்பைச் சாரமாகக் கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்க கொள்கையினையும் அடித்தளமாகக் கொண்டே ஜான் பெர்க்கின்ஸின் வாழ்வு அமைவதை இப்புத்தகத்தில் காணலாம். அவர் ஆற்றிய பணியும் அவ்விரண்டின் வளர்ச்சிக்கும், உதவியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் வளர்ந்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. தற்போது ‘பயங்கரவாத எதிர்ப்பு (war on terror) என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ முகாம்களை நிறுவி அங்கு தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவியுள்ளது. இதற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கை கொண்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறையின் இதயமாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சரியான விடை என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியிலும், அதோடு நிறுவப்படும் கம்யூனிஸ ஆட்சியிலுமே உள்ளது என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறு விடை கொடுப்பதற்கு நமக்கு வரலாற்று அறிவு அவசிமாகிறது. அமெரிக்கப் பேரரசு வளர்ந்து வந்த வரலாற்றினைப் புரிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிஸ அரசியலில் சாதனை புரிய முடியும். அதற்கு இப்புத்தகம் ஓரளவிற்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது…

SKU: 978-93-82826-46-0
Category:
Tags:, ,
Weight 0.375 kg
Dimensions 22 × 14 × 3.5 cm
book-author

Edition

3rd

Format

Publisher

பாரதி புத்தகாலயம்- Bharathi Puthakalayam

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.