Biogeography-உயிரினப் புவியியல்

By (author)S.Antony Norbet

LKR 650.00LKR 660.00

உயிரினப் புவியியல் by எஸ்.அன்ரனி நோர்பேட் Published by சேமமடு பதிப்பகம்  1st Edition

உயிரினப் புவியியல் என்பது, உலகில் காணப்படும் பல்வேறு இனங்களின் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பரம்பல் பற்றிய ஆய்வாகவும் புவியியலின் ஒரு கிளையாகவும் விளங்குகின்றது. பௌதிகச் சூழலானது இனங்களையும் அவற்றின் இடஞ்சார்ந்த பரம்பலையும் பாதிப்பதாகக் காணப்படுவதனால் அதனைப் பௌதிகப் புவியியலின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இதனால் உலகின் உயிரினக் கூட்டம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் ஆய்வாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் உயிரியல், உயிர்ச் சூழல், பரிணாமம் பற்றிய ஆய்வுகளுடன் நெருங்கிய இணைவினையும் கொண்டிருக் கின்றது. இன்று, உயிரினப் புவியியல் வரலாற்று உயிரினப் புவியியல், உயிர்ச் சூழல் உயிரினப் புவியியல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் உயிரினப் புவியியல் என மூன்று பிரதான பிரிவுகளாகக் கருதப்படு கின்றது. வரலாற்று ரீதியான உயிரினப் புவியியலானது கடந்த கால இனங்களின் பரம்பலில் காலநிலை மாற்றத்தின் செல்வாக்கு மற்றும்  குறிப்பிட்ட சில பகுதிகளில் ஏன் குறிப்பிட்ட சில இனங்கள் விருத்தியுற்றிருக்கின்றன, கண்டத் தகடுகளின் அசைவால் இனங்களின் நகர்வுகள் எவ்வாறு இடம் பெற்றன, அதற்கான சுவட்டுச் சான்றுகள் எவை என்பன பற்றி ஆய்வு செய்கின்றது.
”உயிர்ச் சூழல் உயிரினப் புவியியலானது காலநிலை, முதனிலை உற்பத்தி மற்றும் வாழிடங்கள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்கின்றது. பேணிப் பாதுகாத்தல் தொடர்பான உயிரினப் புவியியல் இயற்கையினையும் அதன் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீள்நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பாக ஆய்வு செய்கின்றது.
விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழிட அமைவிடங்களானது மண் இரசாயனம் அல்லது ஈரப்பதன் மட்டங்கள் அல்லது வெப்பநிலை வீச்சு அல்லது இடம்சார்ந்த அமைப்பு என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் காலநிலை, புவிச்சரிதவியல், மண் விஞ்ஞானம்,  உயிர்ச் சூழல், நடத்தை பற்றிய விஞ்ஞானங்கள் என்பன உயிரினப் புவியியலுடன் நெருக்கமான இணைப்பினைக் கொண்டுள்ளன. கடந்த காலத்திலும் இன்றும் பரம்பல் பாங்குகளில் ஏற்பட்ட, ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் விளக்கங்களை உயிரினப் புவியியல் முன்வைக்கின்றது.
உள்ளடக்கம் :  உயிரினப் புவியில்: ஓர் அறிமுகம்,உயிரினங்களின் தோற்றம்,மண்ணின் இயல்பும் உருவக்கச் செயன்முறையும் ,  உலகின் பிரதான மண்வகைகளின் பரம்பலும் இயல்புகளும், நீர், சூழல் தொகுதிகள்,உயிர்ப்-புவி இராசயன வட்டங்கள், தாவரங்களின் வழிமுறை வளர்ச்சி,உயிர்ப் பல்வகைமை,அருகிவரும் உயிரினப் பல்வகைமை மையங்கள
SKU: 97-895-568-502-60
Category:
Tags:, ,
Weight .0350 kg
Dimensions 3 × 14 × 21 cm
book-author

Customer Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.