+94114912222/+94715678981
10%

இஸ்லாமும் இங்கிதமும்


Language: Tamil
Publisher: Islamic Foundation Trust
Author: Nooh Mahlari
ISBN: 978-81-232-0258-7
Shipping Weight: 0.175 kg
Size: 21.5x14.1x0.8 cm
No. of Pages: 176
Binding: PaperBack
LKR 252.00 LKR 280.00இஸ்லாமும் இங்கிதமும்
நீங்கள் உங்கள் சகோதரனைப் புன்முறுவலுடன் பார்ப்பதும் ஓர் அறமே” என்பது நபிகளார் கற்றுத்தந்த அருமையான வாழ்வியல் கலைகளில் ஒன்று.
‘உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது’ என்றோஇ ‘அனுமதி பெற்று உள்ளே வருக’ என்றோ பல நிறுவனங்களிலும் அலுவலகங்-களிலும் வீடுகளிலும் பலகைகள் தொங்குவதை நாம் பார்த்திருக்-கலாம். இருபதாம் நூற்றாண்டு கற்றுத்தந்த இனிய நாகரிகம் இது என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கற்றுத்தந்த அழகிய நடைமுறைதான் இது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ‘மற்றவர்களின் வீடுகளில் நுழைவதற்கு முன்பு அந்த வீட்டாரின் அனுமதியைக் கோருங்கள். அதுதான் உங்களுக்கு மிகச் சிறப்புடையதாகும்’ எனும் திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் (திருக்குர்ஆன் 24: 27) இதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதி-யாகவே ஆக்கிவிட்டான் இறைவன்.
அதுமட்டுமல்லஇ குறிப்பிட்ட மூன்று நேரங்களில் மட்டும் பெற்றோர்களின் அறைகளில் நுழைவதற்குப் பிள்ளைகள் அனுமதி பெறவேண்டும் எனும் நனிசிறந்த நாகரிகத்தையும் இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. நவீன நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருப்பதாக ஊரறியத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மேலை நாடுகளில்கூட காணப்படாத இங்கிதம் இது. இஸ்லாமிய வாழ்வியல் எத்துணை உயர் நாகரிகச் சிறப்பும் பண்பாட்டுச் செழுமையும் கொண்டது என்பதை அறிய இந்த ஒரு கட்டளையே போதுமானது.
இதுபோல் திருக்குர்ஆனும் திருநபி(ஸல்) அவர்களும் கற்றுத்தரும் இங்கிதங்கள் ஏராளம்... ஏராளம்..! அவற்றை-யெல்லாம் அழகிய வடிவில் தொகுத்து ‘இஸ்லாமும் இங்கிதமும்’ எனும் தலைப்பில் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் ‘சமரசம்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். வாசகர்களின் ஒருமித்த பாராட்டுகளை அந்தத் தொடர் அள்ளிச் சென்றது. நபிமொழிச் சுரங்கத்தில் நுழைந்து மௌலவி அவர்கள் தோண்டித் தோண்டி எடுத்துத் தந்த அந்தக் கருத்துக் கருவூலம்தான் இன்று உங்கள் கைகளில் நூல் வடிவில் தவழ்கிறது.
இந்த நூலில் காணப்படும் இங்கிதங்கள் அனைத்தும் நபிகளாருக்கு இறைவனே கற்றுத் தந்தவை. மனித வாழ்வு எல்லா வகையிலும் மேம்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த இங்கிதங்களை நாமும் பின்பற்றி மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும். அதன் மூலம் நம் வாழ்வு இம்மையிலும் அழகு பெற வேண்டும் மறுமையிலும் ஒளி பெறவேண்டும் என்பது நமது பேரவா.

Simillar Books

10%
Off
அமுத வாக்குகள்
LKR 864.00 960.00
10%
Off
Beliefs & Teaching

LKR 720.00 800.00
8%
Off
Valikattalum Alosanayum

LKR 700.00 760.00
5%
Off
கற்றல் உளவியல்
LKR 190.00 200.00
8%
Off
5%
Off
கல்வித் தத்துவம்
LKR 530.00 560.00
3%
Off
10%
Off
0%
Off
0%
Off
0%
Off
Philoshophy- மெய்யியல்
LKR 350.00 350.00
0%
Off
0%
Off
0%
Off
Puviyiyal-புவியியல்-Gr-6
LKR 150.00 150.00
0%
Off
Puviyiyal-புவியியல்-Gr-10
LKR 250.00 250.00
0%
Off
Varalaru-வரலாறு -Gr-10
LKR 200.00 200.00
-11%
Off
10%
Off
Sutradal-சுற்றாடல்-Gr-5
LKR 355.00 395.00
8%
Off
-10%
Off
10%
Off
Puviyiyal-புவியியல்-Gr-12
LKR 315.00 350.00
10%
Off
Kanidham-கணிதம் -Gr-4
LKR 270.00 300.00
11%
Off
Sutradal-சுற்றாடல்-Gr-4
LKR 375.00 420.00
0%
Off
0%
Off
Ulaha Varaipadam-World Atlas-Tamil
LKR 525.00 525.00
0%
Off
Umthathus Salik-Tamil

LKR 350.00 350.00
0%
Off
Duas-பிரார்தனைகள்
LKR 130.00 130.00
6%
Off
6%
Off